அரசுப் பள்ளியில் இடநெருக்கடி : மாற்று ஏற்பாடுகள் செய்ய பெற்றோர் கோரிக்கை மனு
அரசுப்பள்ளியில் இடநெருக்கடியால் சிக்கி தவிக்கும் மாணவ-மாணவியர்கள் மாற்று ஏற்பாடுகள் செய்ய பெற்றோர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு வேண்டுகோள்.
திருச்சி , ஆக 14- திருச்சி மாவட்டம்,ஸ்ரீரங்கம் வட்டம் வெள்ளித்திருமுத்தம் வருவாய் கிராமம், 2-வது வார்டில் கீழச் சித்திரை வீதியில் மாநகராட்சிக்கு சொந்த கட்டிடமானது, 1897-ம் ஆண்டு தொடங்கிய டாக்டர் ராஜன் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, இந்தாண்டு 125 ஆம் ஆண்டு வரலாறு படைத்துள்ளது இப்பள்ளி. தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 10 ஆசிரியர்களை கொண்டு இயங்கி வருகிறது.
இப்பள்ளியில் ஸ்ரீரங்கம் சுற்று வட்டாரத்தில் உள்ள 1,2,3,4,5 வார்டுகலிருந்து அதிகமான மாணவர் சேர்க்கையால் 2022-2023 கல்வியாண்டில் சராசரியாக வகுப்பறைக்கு 70 வீதம் சுமார் 600 மாணவ-மாணவியர்கள் சேர்ந்து கல்விக்கற்று வருகின்றனர். இதே பள்ளியில் சென்ற 2021 ஆண்டு 480 மாணவ-மாணவியர்கள் சேர்ந்து இருந்தனர், அப்போது கொரோனா விதிகள் நடைமுறையில் இருந்ததால் பள்ளிக்கு என சில விதிமுறை வகுத்து வகுப்புகளுக்கு நாட்களை பிரித்து வகுப்பு நடைபெற்றது. இப்பள்ளியில் நூலகம் 1, சமயலறை 1,மினி ஹால் 1,கீழ் தளத்திலும் & மேல் தளத்திலும் சிறிய வடிவிலான கழிவறைகள், மைதானம் இல்லை, வகுப்பறைகள் 11 உள்ளன. (இதில் 3 வகுப்பறைகள் அளவில் மிக சிறியவை என்பது குறிப்பிடத்தக்கது) மாணவ-மாணவர்கள் தரையில் அமரந்தும், இரண்டு வகுப்பறைகளுக்கு மட்டும் அமர பென்ச் வசதிகள் இருந்தன. பின்நாளில் தொற்று எண்ணிக்கை குறைந்ததால் அனைத்து வகுப்புகளும் அனைத்து நாட்களும் தொடர்ந்து செயல்படும் என்று அறிவிப்பு வெளியான நாளிலிருந்து இப்பள்ளியில் மாணவ-மாணவியர்களுக்கு இடநெருக்கடியில் இயங்கியது.
ஏன்…? இந்த குறிப்பிட்ட பள்ளியில் மட்டும் சேர்க்கை அதிகமாக இருக்கிறது என்று ஆராய்ந்த போது,கொரோனா காலக்கட்டத்தில் ஓன்னறை ஆண்டுகள் ஊரடங்கு அமலில் இருந்ததால் பலர் வேலையின்மை காரணமாக வருமானம் இன்றி தவித்த நிலையில் தனியார் பள்ளியிலிருந்து அரசு பள்ளிக்கு 2021,2022 கல்வியாண்டுகளில் அரசு பள்ளியில் சேர்க்கை அதிகமானது.
இரண்டு ஆண்டுகளுக்கு (கொரோனாவுக்கு முன்பு) தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளிகளின் தரம் உயர்த்த முந்தைய அரசு, அரசுப்பள்ளிகளுக்கு என்று ஸ்மார்ட் கிளாஸ் என்னும் சிறப்பு திட்டத்தை அமல்படுத்தியது. அதில் முதற்கட்டமாக சில அரசு பள்ளிகளை மட்டும் தேர்ந்தெடுத்து, மாணவ-மாணவியர்கள் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் விதமாக வகுப்பறைக்கென்று எளிதாக அமர்ந்து பாடங்களை எழுத, படிக்க வசதியாக பென்ச், குளிர் சாதனவகுப்பறையாக முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டது.
எதற்காக இப்பள்ளியை ஸ்மார்ட் கிலாஸ் வகுப்புக்களாக முழுவதும் மாற்றிய நோக்கமே இங்கு கேள்விக்கு உள்ளாகி உள்ளது. அனைத்து வகுப்பறைகளிலும் மாணவ-மாணவியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் பென்ச் இல் இடம் இல்லாததால் காரணத்தால் நடைபாதை சுற்றி தரையில் அமர வைக்கப்படுகிறார்கள்.
பள்ளி நடந்து கொண்டு இருக்கும் பகல் நேரங்களில் வகுப்பறையில் அவ்வப்போது ஏற்படும் திடீர் மின் வெட்டு அல்லது மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை ஏற்பட்டால் இங்கு இருக்கின்ற 11 வகுப்பறைகளில் 8 வகுப்பறைகள் முழுவதும் “கும் இருட்டு அறையாக” மாறிவிடும். இதனால் நாள் முழுவதும் பாடம் கற்பிக்க இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனை பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை மாற்று ஏற்பாடுகளான சோலார் வசதிகளோ, ஜென்ரேட்டர் வசதிகளோ செய்துதரப்படவில்லை. பள்ளி வளாகத்தில் குழந்தைகளுக்காக சமையல் செய்யும் சமையல் கூடம் உள்ளதால் அந்த வகுப்பறையில் சுற்றி புகை மூட்டமாக காணப்படுகிறது. இதனால் அந்த வகுப்பறையில் அமரும் மாணவ மாணவிகள் கண் எரிச்சல், வியர்வை மற்றும் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். மதிய உணவு இடைவெளி போது குறைந்தளவு இடமே உள்ளதால் அனைத்து மாணவ-மாணவியர் அமர்ந்து உணவு உட்கொள்ள இடம் வசதி போதுமானதாக இல்லை. இதனால் 2 முறையாக மாணவ-மாணவியர்களை பிரித்து சாப்பிடும் நிலை, அத்தோடு முட்டை வழங்கப்படுவதால் அதன் கழிவுநீரை அங்கேயே கொட்டுவதால் முட்டை கவிச்சி பள்ளி முழுவதும் வீசுகிறது. இதனால் மாணவர்கள் சரிவர உணவு உட்கொள்ள முடியாததால் முட்டையை அப்படியே குப்பை தொட்டியில் வீசும் நிலை ஏற்படுகிறது, பள்ளியை சுற்றி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மாணவ-மாணவியருக்கு அவ்வப்போது உடல்நிலை குறைவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது இதைப் பற்றி பெற்றோர்கள் பலமுறை கல்வி அதிகாரிகளிடம் எடுத்துரைத்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை அவர்களை கேட்டால் எங்கள் உயர் அதிகாரியிடம் தெரிவித்துவிட்டோம் தற்போது இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில் உடல் உபாதைகள் ஏற்பட வழிவகுக்கும் என்பது பெற்றோர்களின் குமரலாக உள்ளது. இந்த நிலையை போக்க, காணோளி காட்சி மூலம் 2018 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு ஸ்ரீரங்கம் 1 வது வார்டில் அதிகமான குடியிருப்பு நிறைந்த லெட்சுமி நகர் பகுதியில், 1 கோடியே 60 லட்சம் மிதிப்பீட்டில் நபார்டு நிதியுதவின் கீழ் 4 ஆண்டுகளாக பூட்டியிருக்கும் அதிநவீன முறையில் கட்டியுள்ள அய்யனார் அரசு உயர்நிலைப்பள்ளி உடனடியாக ஆய்வு செய்து மாணவ மாணவிகளின் எண்ணிக்கையை பிரித்து வகுப்புக்கள் தொடர்ந்தால் மட்டுமே சாத்தியமாகும். இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட கலெக்டர், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அன்பழகன் கையில் எடுத்து டாக்டர் ராஜன் பள்ளியில் நிலவும் இடநெருக்கடியை தீர்வுகாண,புதிதாக கட்டப்பட்டுள்ள அய்யனார் பள்ளி கட்டிடத்தை டாக்டர் ராஜன் நடுநிலைப்பள்ளியுடன் இணைத்து கல்வி சேவை ஆற்ற உதவிடுமாறு, இதை செய்து கொடுக்க வேண்டுமென்று ஸ்ரீரங்கம் வாழ் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.