பி.ஜே.பி. மோடிஅரசின் தொகுதி மறுவரையறையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பேரணி
திருச்சி, ஆக.11 பிஜேபி மோடி அரசின் தொகுதி மறுவரையறையை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் தலைமையில், தெற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம், வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் மாவட்ட பொருளாளர் முரளி, மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, மார்க்கெட் பகதுர்ஷா, ஆகியோர் முன்னிலையில் மாபெரும் அமைதி ஊர்வலம் தியாகி அருணாச்சலம் மன்றத்தில் இருந்து காந்தி மார்க்கெட் மகாத்மா காந்தி சிலை வரை அமைதி ஊர்வலம் நேற்று நடைபெற்றது.
மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி கொல்லைப்புற வழியாக தன் ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்திக்கொள்ள துடிக்கின்ற குல்லுக பட்டர் மோடியின் பகல் கனவை இந்த அமைதி ஊர்வலம் சிதறடிக்கும் என்று கண்டன உரையாற்றினார். காங்கிரஸ் மூத்த முன்னோடிகள் கள்ளத்தெரு குமார், ஜெகதீஸ்வரி, மார்க்கெட் சம்சுதீன், வெல்லமண்டி பாலு மற்றும் கே .கே. நகர் அருண் ஆகியோர் கருப்பு பலூனை உடைத்து கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
நிகழ்வில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜெரோம் ஆரோக்கிக்யராஜ், ஜெயப்ரகாஷ், வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள், வட்டார தலைவர்கள், மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஷேக் தாவுத், சத்தியநாதன், விமல், செல்வம், சிந்தாமணி கணேசன், அசோகன், செந்தமிழ் செல்வன், முன்னாள் ராணுவ பிரிவு மாநில தலைவர் ராஜசேகரன், ஆராய்ச்சி பிரிவு மாநில துணைத்தலைவர் பெஞ்சமின் இளங்கோ, கலைப்பிரிவு மாநில பொதுசெயலாளர் அருள், சிவா வைத்தியநாதன், கோட்ட தலைவர்கள் ஜங்ஷன் பிரியங்கா படேல், காட்டூர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் அழகர், சுப்ரமணியபுரம் எட்வின், உறையூர் பாக்கியராஜ், வரகனேரி இஸ்மாயில், ஏர்போர்ட் கனகராஜ், புத்தூர் மலர் வெங்கடேஷ், திருவனைக்கோவில் தர்மேஷ், ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, அணித்தலைவர்கள் மகிளா காங்கிரஸ் அஞ்சு, ஷீலாசெளஸ், அபிநயா, குணசித்ரா, சக்தி அபியான் தோழி மாரீஸ்வரி, அமைப்பு சாரா பிரிவு மகேஷ், ஓபிசி பிரிவு ரியாஸ், இலக்கிய பிரிவு பத்மநாபன், கலைப்பிரிவு சுப்புராஜ், ஐடி பிரிவு கிளமெண்ட், நேசவாளர் பிரிவு சேகர், ஊடக பிரிவு செந்தில், மனித உரிமை பிரிவு ஆறுமுகம், வழக்கறிஞர் பிரிவு விக்னேஷ், சில்வஸ்டர், பொறியாளர் அணி இம்ரான், சிறும்பான்மை பிரிவு மொய்தின், என்ஜிஓ கண்ணன், வார்டு தலைவர்கள் பாலாஜி, தினேஷ், மணிமேகலை, மாதவன், யோகநாதன், விஜி, சரவணன், பாண்டியன், மும்தாஜ், கண்ணன், பெரியசாமி, பூபாலன், ரமேஷ், செபாஸ்தியர், அபிராகாம், சரவணன், ரஃபிக், லட்சுமணன், ஜஹிர்உசேன், அபுதாகிர், சிவலிங்கம், சிவகுமார், பால்சாமி, அப்துல்சலாம், சோனராமநாதன், வார்டு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்