திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தச்சங்ங்குறிச்சியில் மோட்டார் பைக் மீது எதிரே வந்த லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
லால்குடி அருகே மேல கண்ணாக்குடியைச் சேர்ந்தவர் ராசு. இவருடைய மகன் 32 வயதான ரவிக்குமார். இவர் தனது மோட்டார் பைக்கில் சிறுகனூர் தச்சங்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் நடுத்தெருவை சேர்ந்த 47 வயதான கலியபெருமாள் எதிரே டிப்பர் லாரியில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் தச்சன்குறிச்சியில் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது மோட்டார் பைக் மீது எதிரே வந்த டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது் இதில் தடுமாறி கீழே விழுந்த ரவிக்குமார் படுகாயம் அடைந்தார். விபத்தைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என கூறினார்.
இது குறித்து தகவல் அறிந்த காணக்கிலி நல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.