சட்ட விரோத மதுவிற்பனை தடுப்பது குறித்து கலந்தாலோசனை கூட்டம்

0 42
voc

திருச்சி துவாக்குடியில் உள்ள அரசு மதுபான கிடங்கில் சட்ட விரோத மதுவிற்பனை தடுப்பது குறித்தும் அரசு மதுபான விற்பனையை அதிகரிப்பது குறித்தும் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து23 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் தஞ்சையில் கள்ள சந்தையில் அரசு மதுபானங்களை வாங்கி குடித்தவர்கள் இரண்டு பேர் மர்மமான முறையில் இறந்துள்ளனர்.

இதனால் தமிழக அரசு தமிழக முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனையை தடுப்பது உடன் அரசு மதுபானகளை கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.அதன் அடிப்படையில் தமிழக காவல்துறையினரும் மதுவிலக்கு பிரிவு போலீசாரும் தீவிரமாக கள்ளச்சாராயம் காய்சுபவர்கள் மற்றும் கள்ளச் சந்தையில் அரசு மதுபானங்களை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

national admission
click the image to chat on whatsapp

click the image to chat on whatsapp

இந்த நிலையில் துவாக்குடியில் உள்ள அரசு மதுபான குடோனின் சட்ட விரோதமாக கள்ளச் சந்தையில் விற்கப்படும் மதுபான விற்பனையை தடுப்பது குறித்தும் அரசு மதுபான விற்பனையை அதிகரிப்பது குறித்தும் அரசு டாஸ்மார்க் சூப்பர்வைசர்களுடன் நடந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு திருச்சி மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமை வைத்தார்.திருவெறும்பூர் அரசு மதுபான கிடக்கு மேலாளர் ராஜ்குமார், திருச்சி மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் வசுமதி, திருவரம்பூர இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா ஆகியோர் முன்னிலை வைத்தனர்.இந்த கூட்டத்தில் அரசு மதுபானங்களை கடையிலிருந்து சட்ட விரோதமாக வெளிச்சந்தையில் அதிக விலைகளுக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும்.

மேலும் அரசு மதுபான கடையிலேயே உள்ள சரக்குகளின் விற்பனையை அதிகரிக்க வேண்டும். அதேப்போல் அரசு அனுமதித்து உள்ள நேரத்திற்கு முன்பும் பின்பும் விற்க கூடாது
அதேப்போல் ஒரு நபருக்கு நான்கு பாட்டில்களுக்கு மேல் விற்பனை செய்யக்கூடது என்பது குறித்து அ
ரசு மதுபான கடை சூப்பர்வைசர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!