முசிறி அரசு கலைக் கல்லூரியில் நுகர்வோர் மன்றம் தொடக்கம்
திருச்சி, பிப்.21 முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நுகர்வோர் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நுகர்வோர் மன்ற தொடக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் கணேசன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். ஆங்கிலத்துறை தலைவர் முருகராஜ் பாண்டியன் பேராசிரியர் பரமசிவம் முன்னிலை வகித்தனர் இணை பேராசிரியர்கள் சந்திரசேகர் ரேவதி சார்லஸ் செல்வராஜ் சுந்தரராஜ் ராஜேந்திரன் ஆலோசனை வழங்கினர். சிறப்பு விருந்தினர்களாக வழக்கறிஞர்கள் மனோகரன் பாலசுப்பிரமணியன் ரகுநாதன் ஆகியோர் நுகர்வோர் மன்றம் குறித்து பேசினர். கல்லூரி மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக உதவி பேராசிரியர் தீபா வரவேற்றார். நுகர்வோர் மன்ற பொறுப்பாளர் இணை பேராசிரியர் சிவகாமி நன்றி கூறினார்.