மழை வெள்ளப் பாதிப்புகளை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை

0 261
Stalin trichy visit

திருச்சி, அக்.15 திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறை, ஊரக வளர்ச்சி, பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைதுறை ஆகிய அலுவலர்கள் நிய மிக்கப்பட்டு 24 மணி நேர மாவட்ட கட்டுபாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இக்கட்டுபாட்டு அறையின் 1077, மற்றும் 0431-2418995 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். 93840 56213 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் புகார் அனுப்பலாம். மேலும், வட்ட அலுல கங்களிலும் 24 மணி நேர கட்டுபாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

திருச்சி கிழக்கு: 0431 -2711602. 9445461808. திருச்சி மேற்கு: 04312410410, 9445000602. திருவெறும்பூர் :0431 – 2555542, 9790093270. சிறீரங்கம் :04312230871, 9445000603. 04332-260576, 9445000604. மருங்காபுரி 04332-299381, 9840378255. லால்குடி 0431 – 2541233, 9445000605. & நல்லூர் 0431 2561791, 9445000606. முசிறி 04326 260226, 9445000607.துறையூர் 04327-222393, 9445000609. தொட்டியம் 04326 – 254409, 9445000608. இந்த கட்டுப்பாட்டு அறைகளுக்கோ, அல்லது வட்டாட்சியர்களின் மொபைல் எண்ணிற்கோ பொதுமக்கள் புயல், மழை, வெள்ளம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். தற்போது பரவாலாக மழை பெய்து வருவதால் ஆறு, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் குழந்தைகளை செல்லாத வண்ணம் கவனமாக இருக்குமாறு பெற்றோர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைவெள்ளம், நீர்நிலைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்களை முன் கூட்டியே எளிதாக பொது மக்கள் உடனுக்குடன் அறிந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்கு வண்ணம் டி.என்.அலர்ட்( TN- ALERT – Mobile app) என்ற செல்போன் செயலி உருவாக்கப் பட்டுள்ளது. இந்த செயலியை ‘ Google play store மற்றும் ‘IOS App store ல் இருந்து அனைவரும் பதிவிறக்கம் செய்யலாம். இந்த செயலியின் மூலம் மழை, வெள்ளம் தொடர்பான புகார்கள் தெரிவித்தால் மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.