குடும்ப தகராறில் விபரீத முடிவு; உயிரைவிட்ட பெண்!

0 372
Stalin trichy visit

திருச்சி உறையூர் வெங்காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரபுராம். இவரது மனைவி கஸ்தூரி(வயது 42). இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் வீட்டில் இருந்த கஸ்தூரி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி

அடைந்த அருகில் இருந்தவர்கள் கஸ்தூரியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.