காவலர்களுக்கு குளிர் கண்ணாடிகள்: சரக டி.ஐ.ஜி வழங்கினார்

0 221
Stalin trichy visit

திருச்சி, ஏப். 28  திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நியுரோ ஒன் மருத்துவமனை சார்பாக முழு உடல் பரிசோதனை திருச்சி மாவட்ட ஆயுதப்படை  திருமண மண்டபத்தில்  நேற்று நடைபெற்றது. இதில், 170 காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் சிலர் கலந்து கொண்டனர். மேற்படி மருத்துவ முகாமை, நியுரோ ஒன் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் S. விஜயகுமார், நியுரோ சர்ஜன்  மற்றும் PRO ரமேஷ் அவர்களும் இணைந்து நடத்தி கொடுத்துள்ளனர்.

மேலும், இம்முகாமில் கலந்து கொண்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்களுக்கு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனை செல்லும் பட்சத்தில் 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதன் மூலம், காவல்துறையினர் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

இம்முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், BEAST THE BOUNCERS சங்கம் சார்பில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து திருச்சி மாவட்ட காவல்துறையினர் அவர்களது கண்களை பாதுகாத்துக் கொள்ள 25 குளிர் கண்ணாடிகளை (Cooler Glass) திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் டாக்டர். வருண்குமார்,  வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.