ஒன்றரை மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவு – கண் அறுவை சிகிச்சைக்காக மனிதநேயம் காட்டிய துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை!

0 809
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி சின்ன செட்டிக்குளத் தெரு நிஷாருதின் மனைவி சமீம் நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது 23, தன்னுடைய கண்ணில் செய்யப்பட வேண்டிய அறுவை சிகிச்சைக்காக கொரோனா பரிசோதனை செய்து, அது நெகடிவ் என்றால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்கிற சூழ்நிலையில்,

துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வந்து கொரோனா மாதிரியை ஆய்வகத்தில் நேற்று அளித்துவிட்டு, முதன்மை மருத்துவ அலுவலர்மருத்துவர். ஜான் விஸ்வநாத்திடம் சமீமாவிற்கு நாளை காலை நடைபெற இருக்கும் கண் அறுவை சிகிச்சைக்கு நாளை காலை 10 மணிக்குள் கோவிட் ரிசல்ட்ஸ் கட்டாயம் தேவைப்படுகிறது, இல்லாவிட்டால் திட்டமிட்டபடி கண் அறுவை சிகிச்சை தடைபட்டு தள்ளிபோய்விடும், ஒரு சில சொந்த காரணங்களால் கண்அறுவை சிகிச்சையை உடனடியாக செய்தாக வேண்டும் என்று உதவி செய்யுங்கள் என கேட்டு கொண்டுள்ளார்.

மரு. ஜான் விஸ்வநாத், தலைமை மருத்துவர், துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை.

அதனடிப்படையில் முதன்மை மருத்துவர் ஜான் விஸ்வநாத் நோயாளியின் அவசர தேவையை புரிந்து கொண்டு, சமீமாவின் மாதிரியை மருத்துவமனை பணியாளர் ஒருவரை பிரத்யோகமாக நியமித்து நேரடியாக திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவ கல்லூரியில் உள்ள நுண்ணுயிரியல் துறைக்கு நேற்று மாலை அனுப்பி வைத்தார.

இடையில் திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவ கல்லூரியில் உள்ள நுண்ணுயிரியல் துறை தலைவர் பேராசிரியர் மரு. ஞானகுருவிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நோயாளி சமீம் நிஷாவின் அவசர தேவையை எடுத்து கூறி முடிந்தவரை விரைவில் பரிசோதனை செய்து விரைவில் ரிசல்ட் தரும்படி கேட்டுகொண்டார். நுண்ணுயிரியல் துறை தலைவரும் சமீம் நிஷாவின் அவசர தேவையை புரிந்து கொண்டு மனிதநேயத்துடன் உதவிட உறுதி கூறினார்

அவரது உத்திரவின் படி நுண்ணுயிரியல் துறையின் உதவி போராசிரியர் மருத்துவர் லாவண்யா இன்று 5.35க்கு சமிம் நிஷாவின் கொரோனா பரிசோதனை மாதிரியை பெற்று கொண்டு , மின்னல் வேகத்தில் பரிசோதனை மேற்கொண்டு மாலை 6.50 மணிக்கு ரிசல்டை அதற்குரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததுடன், துவரங்குறிச்சி தலைமை மருத்துவர் ஜான் விஸ்வநாத்திற்கு செல்போனில் அழைத்தும் ரிசல்டை தெரிவித்து உள்ளார்.

பேராசிரியர் மரு.ஞானகுரு MD. நுண்ணியிரியல் துறை தலைவர், கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவ கல்லூரி திருச்சி

இதுவரை , கொரோனா காலத்தில் இந்திய மருத்துவ துறையிலேயே கொரோனா மாதிரியை பெற்று ஒரு ஒன்றரை மணி நேரத்திற்குள் டெஸ்ட் ரன் பண்ணி ரிசல்டை வெப்சைட்டில் மிக துரிதமாக அஃப்டேட் செய்த சாதனை இது தான் என்று சக மருத்துவர்களும் பொதுமக்களும் சம்பந்தபட்ட மருத்துவர்களுக்கும் இதர பணியாளர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாளை காலை 10 மணிக்கு ரிசல்ட் கிடைத்தாலே பெரிய விஷயம் என்று ஆவலுடன் காத்திருந்த சமீம் நிஷா மற்றும் குடும்பத்தினருக்கு இன்று மாலை 7 மணிக்கெல்லாம் ரிசல்ட் கையில் கிடைத்தது மிகவும் ஆச்சரியமாகவும், இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தது என்றும் இதுவரை இப்படி ஒரு துரித பரிசோதனை சேவையை தனியார் மருத்துவமனையில் கூட பார்த்தில்லை என்று புளங்ககிதம் அடைந்தனர்.

யாரோ ஒரு நோயாளிதானே என்று அலட்சியம் செய்யாமல், நோயாளியின் அவசர தேவையை புரிந்து கொண்டு யாருடைய சிபாரிசும் , அழுத்தமும் இல்லாமல்
பல ஆயிரம் டெஸ்ட்கள் செய்யக்கூடிய நுண்ணியிரியல் துறை ஆய்வகத்தில் அவருக்கு முன்னுரிமை கொடுத்து கடமையுணர்வுடனும் மனித நேயத்துடனும் செயலாற்றி ஜெட் வேகத்தில் கொரோனா பரிசோதனை செய்து ரிசல்ட்டை வெளியிட்ட நுண்ணுயிரியல் தலைவர் பேராசிரியர் மரு.ஞானகுரு, உதவி பேராசிரியர் மரு.லாவண்யா, மற்றும் இவர்களை ஒருங்கிணைத்து உதவிய துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜான் விஸ்வநாத் மற்றும் சம்பந்தட்ட இதர பணியாளர்கள் பாரட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியர்வர்கள்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

Leave A Reply

Your email address will not be published.