ஐடிஐ சான்றிதழ்களில் திருத்தம்; கலெக்டர் வாய்ப்பு

0 421
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) 2014ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட தேசிய தொழிற்சான்றுகளில் (என்டிசி) உள்ள தவறுகளை, பயிற்சியாளர்களின் பெயர், தந்தை பெயர், தாய் பெயர், புகைப்பட மாற்றம் மற்றும் பயிற்சி பெற்ற தொழிற்பிரிவு பெயரிலுள்ள திருத்தம் ஆகியவற்றை திருத்தம் செய்து கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சரிசெய்து கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்களுக்கு 2014ம் ஆண்டுக்குப்பின்னர் வழங்கப்பட்டுள்ள அனைத்து தேசிய சான்றிதழ்களில் உள்ள தவறுகளை விடுதலின்றி உரிய ஆவணங்களை வைத்து ஒப்பிட்டு சரிபார்த்து மீண்டும் பிழை ஏற்படாதவாறு முதல்வர் முன்னிலையில் டிஜிடி இணையதளத்தில் மார்ச் 2ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் 2014க்கு முன்பு வழங்கப்பட்ட சான்றிதழ்களில் திருத்தம் செய்வதற்கான தகவல்கள் அனைத்தும் தட்டச்சு மூலமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதால் அதில் உள்ள தவறுகளை உரிய ஆவணங்களை சரிபார்த்து திருத்தம் செய்யப்படும். இத்தகவலை கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.