மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்
மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் பிலோமினால் புரம் பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களின் அழைப்பினை ஏற்று அப்பள்ளியின் ஆண்டு துவக்கநாளில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அருட்தந்தை மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர் பெருமக்கள் முன்னிலையில் மாணவச் செல்வங்களுக்கு புத்தகங்கள் வழங்கி வழங்கினார். மேலும் காவேரி நகர் வலம்புரி விநாயகர் கோயிலில் திருக்கல்யாணம் திருவிழாவை முன்னிட்டு அக்கோயிலின் முக்கியஸ்தர்கள் அழைப்பினை ஏற்று கலந்து கொண்டார். மேலும் குறிஞ்சி நகர் விஸ்தரிப்பு பகுதிகளில் குப்பைகளைஅள்ளும் பணிகளையும் , மேலும் தெற்கு காட்டூர் முருகன் கோயில் தெருவில் தண்ணீர் லீக் ஆவதை தடுக்கும் விதமாக அதனை சரி செய்திடும் பணிகளையும் , காவேரி நகர் மெயின் சாலையில் இருபுறமும் உள்ள குப்பைகளை அகற்றும் பணிகளையும் , மேலும் காவேரி நகர், அம்பேத்கர் தெருவில் கட்டப்பட்டு வரும் ஹெல்த் & வெல்நெஷ் சென்டர் பணிகளையும் , காவேரி நகர், தெருவில் வெளியேறும் கழிவு நீரினை வெளியேற்ற உகந்த வழிதனை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.