டாக்டர் ராஜன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டம்

0 308
Stalin trichy visit

டாக்டர் ராஜன் நகராட்சி நடுநிலைப் பள்ளி, ஸ்ரீரங்கம்- திருச்சிராப்பள்ளி  மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அந்தநல்லூர் வட்டாரக் கல்வி அலுவலர் அவர்கள் பங்கேற்ற எண்ணும் எழுத்தும் திட்டம் –
கதை வழியே அறிவியல் அறிவோம் நிகழ்வுகள்

டாக்டர் ராஜன் நகராட்சி நடுநிலைப்பள்ளி, ஸ்ரீரங்கம் -எண்ணும் எழுத்தும் திட்டம் கதை வழியில் அறிவியல் என்னும் நிகழ்வில் பெர்னௌலியின் தத்துவம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. திரவம் வேகமாக பாயும்போது திரவ மூலக்கூறுகள் அதைச் சுற்றியுள்ள பொருட்களின் மீது குறைந்த அழுத்தத்தையும் திரவத்தின் வேகம் குறையும் போது அதிக அழுத்தத்தையும் கொடுக்கிறது என்ற பெர்னௌலியின் தத்துவத்தை ஓர் எளிய கதையின் மூலமாக மாணவர்களை நடிக்க வைத்து கி .ஆ.பெ.மேல் நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் நிகழ்த்தி காட்டினார். ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதை கீழே ஊற்றும்போது டம்ளரில் வாய் பகுதியில் அகலமாகவும் பின் நேராகவும் கடைசியில் சொட்டு சொட்ட ஆகவும் விழுவதை கதையின் மூலம் விளக்கிக் கூறிய விதம் மிகவும் அருமையாக இருந்தது

Leave A Reply

Your email address will not be published.