சமயபுரம் கடைவீதியில் மாடுகள் சண்டை : பக்தர்கள் அச்சம்
திருச்சி, ஆக. 19 சமயபுரம் கடைவீதி பகுதியில் காளை மாடுகள் சண்டை . பயந்து தெரித்து ஓடிய பக்தர்கள் வாகன ஓட்டிகள். ரோடுகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க பக்தர்கள் கோரிக்கை.
சமீபகாலமாக நடுரோட்டில் நாய், குரங்கு, மாடு போன்ற விலங்குகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. அதை கட்டுபடுத்த முடியாமல் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் அவதிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு சமயபுரம் கடைவீதி பகுதியில் உள்ள திருச்சி சமயபுரம் சாலையில் இரண்டு காளை மாடுகள் ஆக்ரோஷமாக முட்டி சண்டை போட்டு கொண்டது. இதை அங்கு பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டி என பலரும் கைப்பேசியில் வீடியோக பதிவு செய்தனர். அப்போது காளைகள் முட்டிக்கொண்டு கடுமையாக சண்டையிட்டு சாலையில் இருக்கும் பொருட்கள் , வாகனங்களை சேதப்படுத்தியது. இதையடுத்து சுமார் அரைமணி நேரமாகியும் சண்டை நிற்காததால் அதை பார்த்த சாலையோர கடை உரிமையாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் மாடுகளை பிரிக்க முயற்சி செய்து சண்டையை நிப்பாட்ட முடியாமல் திணறினர். ஒரு கட்டத்தில் மாடுகள் ஒன்றோடு ஒன்றாக இங்கும் அங்கும் நகர்ந்ததால் பக்தர்கள் மீதும் பேருந்துகள் மீதும் மோதியது இதில் பக்தர்கள் அலறி அடித்து மீண்டும் கோயிலுக்கு சென்றனர்.
பின்னர் இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்கள் பேருந்தில் உள்ள ஹாரன் ஒளியை எழுப்பி மாடுகளை பிரிக்க முயற்சி செய்தனர். இதில் ஹாரன் ஒளியின் சத்தத்தில் இரண்டு மாடுகளும் பிரிந்து சென்றது இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து சமயபுரம் கடைவீதி பகுதியில் உள்ள வியாபாரிகள் கூறுகையில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாகவும் மாடுகளை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.