மூதாட்டியின் காதுகளை அறுத்து நகை திருட்டு

0 434
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 28 திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள புலிவலம் காவல் சரகதிற்குட்பட்ட நல்லவன்னிபட்டி பகுதியில் வசிப்பவர் வெள்ளையம்மாள் – இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் வயல்களில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் இவரது காதில் அணிந்திருந்த 1சவரன் தோடை கத்தியால் அறுத்து திருடி சென்றுள்ளனர். இதனால் இவரது காது அறுபட்ட நிலையில் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். – மேலும் இதுகுறித்து இவர் புலிவலம் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். இவரது புகாரின் மேல் காவல்துறையினர் வழக்குப் பதியாமல் இழுத்து அடித்து வருவதாக கூறப்படுகிறது. இதுபோல் இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் சத்யா,இவர் வீட்டில் கால்நடைகளை வைத்து பராமரித்து வருகிறார் சம்பவத்தன்று இரவு சத்யா வீட்டில் வ்ளர்க்கப்பட்ட இரண்டு ஆடுகளை திருடர்கள் காரில் வந்து திருடி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.