ஆன்லைன் மூலம் 2 பேரிடம் ரூ.4½ லட்சம் நூதன மோசடி
திருச்சி, ஆக.10 திருச்சி குழுமணி மெயின் ரோடு சுப்பிரமணியபுரம் பகு தியை சேர்ந்தவர் முகமது ரபிக் (வயது 50). கடந்தமாதம் 25-ந் தேதி இவரது செல் போன் வாட்ஸ்-அப் எண் ணிற்கு மர்ம நபர் ஒருவர் குறுந்தகவல் அனுப்பியுள் ளார். அதில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அபராதம் விதித்து உள்ளதால் இதற்கான லிங்கில் பணத்தை செலுத்துங்கள் என்று கூறப்பட்டு
இதனை உண்மை என்று நம்பிய முகமது ரபிக், அந்த இணைப்பை திறந்து பார்த்
துள்ளார். அப்போது வந்த ஓ.டி.பி.எண்ணை பயன்படுத் திய சிறிது நேரத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்து 958 மாயமானது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முகமது ரபிக், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்போல் போலீசார் திருச்சி மாநகர சைபர் கிரைம் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், திருச்சி வரகனேரி மேலத்தெருவைசேர்ந்தவர் மாரிக்கண்ணு (51). இவர் தனது னது செல்போனில் ஆன் லைன் செயலியை பயன்படுத்தி கொண்டிருந்தார். அப்போது, அதில் வந்தவர்த்தகம் இருந்தது.தொடர்பான விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். இதையடுத்து அவரை தொடர்பு கொண்ட ஒரு மர்மநபர், மாரிகண்ணுவிடம் குறிப்பிட்ட 20 விளம்புரங் களை’லைக்’ செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள் ளார்.
இதனை நம்பிய மாரிக்கண்ணு, தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 84 ஆயிரத்து 800-ஐ அந்த மர்மநப ரிடம் முதலீடு செய்துள்ளார். ஆனால், பலநாட்கள் ஆகியும் எந்தவொரு லாபத்தொகையும் கிடைக்காததோடு, முதலீடு செய்த பணத்தையும் திரும்ப பெற முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட் டதை உணர்ந்த மாரிக்கண்ணு, இதுதொடர்பாக திருச்சி மாநகர சைபர் கிரைம் /போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.