கிணற்றில் தவறி விழுந்த மாணவர் சாவு

0 401
Stalin trichy visit

புதுக்கோட்டை மாவட்டம், இ.இடையபட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் யுவராஜ். பொன்னமராவதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் திருச்சி மாவட்டம் பாலக்குறிச்சி அருகே உள்ள மரவப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். அங்கு அவர் தனது உறவினருடன் மாட்டை பிடிக்க சென்றார். அப்போது, அங்கிருந்த 20 அடி ஆழம் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.