ஏமாற்றும் அண்ணாமலை : துரை வைகோ எம்.பி. பேட்டி
திருச்சி ஜன 20 திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மாலை துரை வைகோ எம்.பி. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திருச்சி விமான நிலையத்தில் அய்க்கிய அரவு அமீரகத்தில் இருந்து லட்சக்கணக்கான இசுலாமியர்கள் வருகை தருகிறார்கள். அவர்கள் தொழுகை மேற்கொள்ள அறையை ஏற்படுத்த திருச்சி விமான நிலைய அதிகாரிகளை நான் வலியுறுத்தினேன். அதை ஏற்று அவர்கள் இசுலாமிய மக்கள் தொழுகை அறையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். இந்தியாவில் திருச்சி சர்வதேச விமான நிலையத்தை முன்மாதிரி விமான நிலையமாக மாற்ற தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருச்சி விமான நிலைய ஒடுதள விரிவாக்க பணிகள் முடிந்த பிறகு பல்வேறு பிரதான விமான நிறுவனங்கள் திருச்சியில் இருந்து சரக்கு விமானங்களை இயக்குவதாக அறிவித்துள்ளனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். திருச்சியில் இருந்து உள்நாட்டு சேவைகளுக்காக ஒரே ஒரு விமானம் நிறுவனம் இருப்பதால் பயணச்சீட்டு விலை அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் பயணம் மேற்கொள்ள அதிகவிலை செலுத்தி வருகின்றனர். எனவே அடுத்த முறை விமானத்துறை அமைச்சரை சந்திக்கும்போது திருச்சியில் இருந்து உள்நாட்டு விமான சேவை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ள கோரிக்கை விடுக்க உள்ளேன். திருச்சி சுங்கத்துறை பயணிகளிடம் மிக கடுமையாக நடந்து கொள்வதாகபுகார் உள்ளது. இந்த கட்டாய சோதனையை குறித்து விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி உள் ளேன். இனி இது போன்ற தவறுகள் நடக்காது.
ஒன்றிய அரசின் பத்தாண்டுகால ஆட்சியில் தமிழ்நாடு அரசுக்கு வர வேண்டிய நிதி கிடைக்கப் பெறவில்லை. மிஷால் புயல் சம்பந்தமாக ரூ.38ஆயிரம் கோடி நிதி கேட்ட பொழுது அதில் ரூ.276 கோடி தான் நிதி கொடுத்தனர். பெஞ்சல் புயலுக்கு ரூ.6675 பேரிடர் நிதி கேட்டிருந்தோம் ரூ.2000 கோடியாக கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார் முதலமைச்சர் பலமுறை நினைவூட்டப்பட்டது. ஆனால் இதுவரை வழங்கவில்லை. கல்வித் துறையில் ஒன்றிய அரசு தரவேண்டிய ரூ. 2000 கோடி நிதியை வழங்க மறுக்கிறது. இதனால் தமிழ்நாடு மக்களுக்கு செயல்படுத்த வேண்டிய பல நல்ல திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் உள்ளது. தமிழ்நாடு பா.ஜ.க, மாநிலதலைவர் அண்ணாமலை இலவச திட்டங்களை செயல்படுத்தினால் மாநில வளர்ச்சிக்கு உண்டான கட்டமைப்பை நிதி எப்படி கிடைக்கும் என கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணி மகளிர் உரிமை தொகை 7 மாதத்திற்கு முன்பு ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமார் ரூ.7 ஆயிரம் கொடுத்து வெற்றி பெற்றுள்ளனர். தற்போது டெல்லி தேர்தலில் சமையல் எரிவாயு உருளை, பெண்களுக்கு மாதம்தோறம் ரூ2000 என வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளனர். அண்ணாமலை பெரும் ஏமாற்றம் தரக்கூடியவரகவே இருக்கிறார். அவரது அறிக்கைகளும் அப்படித்தான் இருக்கிறது என்று துரை வைகோ எம்.பி. பேசினார். பேட்டின் போது மாநில நிர்வாகி மருத்துவர் ரெகயாபேகம், மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு மற்றும் விமான நிலைய அதிகாரிகள் உடன் இருந்தனர்.