பா.ஜ.க. புறநகர் மாவட்ட தலைவர் பொறுப்பேற்பு
திருச்சி, ஜன. 20 பாரதிய ஜனதா கட்சியின் புறநகர் மாவட்ட தலைவர் பொறுப்பு ஏற்பு விழா நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டம் மாவட்ட தலைவர் பொறுப்பு மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருச்சி புறநகர் மாவட்டம் மாவட்ட தலைவர் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜாவிற்கு சிறப்பான வரவேற்பு அளித்து பூரண கும்ப மரியாதை அளித்தனர். இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட தலைவராக மீண்டும் அஞ்சாநெஞ்சனை தேர்வு செய்தனர். மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி, திருச்சி, மணப்பாறையைச் சேர்ந்த 6 பேர் மாநில பொதுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுத்தனர். இதனைத் தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் ஹெச். ராஜா முன்னிலையில் பதவி ஏற்றிக் கொண்டு உறுதிமொழியேற்றனர்.
பின்னர் நிர்வாகி மற்றும் தொண்டர்களும் உரையாற்றிய ஹெச். ராஜா பேசியதாவது
இந்தியாவில் போதை கலாச்சாரத்திற்கு பஞ்சாப் மாநிலம் தான் முதலாவதாக இருந்தது. தற்போது அதை பின்னுக்கு தள்ளி தமிழகம் போதை கலாச்சாரத்திற்கு முதலாவது மாநிலமாக திகழ்கிறது.தமிழகத்தை காப்பாற்ற வேண்டுமானால் திமுக ஆட்சியை அகற்றிவிட்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வர வேண்டும். தற்போது மக்கள் அனைவரும் தெளிவாக உள்ளனர்.என பேசினார்.
இந்நிகழ்வில் விவசாய அணி தேசிய செயற்குழு உறுப்பினர் எஸ்் பி. ராஜேந்திரன், பெருங்கோட்ட இணை அமைப்பு செயலாளர் இலா.கண்ணன், தேர்தல் அதிகாரி ராஜேந்திரன் மாவட்ட பார்வையாளர் லோகிதாஸ் மற்றும் மண்ணச்சநல்லூர், லால்குடி ,முசிறி, மணப்பாறை, திருச்சி உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.