விநாயகர் சிலை பிரதிஷ்டை!

0 441
Stalin trichy visit

திருச்சி பிராட்டியூர் வழிவிடு விநாயகர் கோயிலில் கடந்த 11ம் தேதி மர்ம நபர் ஒருவர் விநாயகர் சிலையை சேதப்படுத்தினார். இதுகுறித்து கோர்ட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இக்கோயிலை பராமரித்து வரும் பா.ஜ.க. நிர்வாகி காசிநாதன், தனது சொந்த செலவில்

ரூ.21 ஆயிரம் மதிப்பில் புதிய சிலை வாங்கிக் கொடுத்தார். இதையடுத்து ஆகம முறைப்படி பூஜை நடத்தி, சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, புனிதநீர் ஊற்றப்பட்டது. அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.