கிழக்குவாசல் கோபுரத்தை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

0 361
Stalin trichy visit

திருச்சி,நவ. 29  திருச்சி ஸ்ரீரங்கம் கிழக்குவாசல் கோபுரத்தின் ஒரு பகுதி கடந்த சில மாதத்திற்கு முன்பு சேதம் அடைந்தது. இதன் காரணமாக அந்த கோபுரத்தின் வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீரங்கத்தில் கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தை விரைந்து சீரமைத்து போக்குவரத்தை துவங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஸ்ரீரங்கம் பகுதி குழு சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பூமார்க்கெட்டை புதிதாக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையின் சீர்கேடுகளை சரிசெய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி செயலாளர் பார்வதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி கவுன்சிலர் சுரேஷ், மாவட்ட செயலாளர் சிவா , மாவட்ட பொருளாளர் சண்முகம் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.