லஞ்சம் பெற்ற வழக்கில் வேளாண் அலுவலர், உதவி அலுவலர் அலுவலருக்கு 3 ஆண்டு சிறை
விவசாய பயன்பாட்டிற்கான சான்று வழங்க லஞ்சம் கேட்டுப் பெற்ற வழக்கில் வேளாண்மை துறைக்கு கலங்கம் விளைவித்த திருச்சி மாவட்ட வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் ஆகியோருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பு.
திருச்சி, நவ. 29 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் வட்டம் குணலை சேர்ந்த அசோக்குமார் என்பவர் அவர் சித்தப்பா பெயரில் வாங்கிய டிப்பர் லாரி மற்றும் டிராக்டரை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த சான்றிதழ் வேண்டி கடந்த 08.08.2007 அன்று மண்ணச்சநல்லுார் வேளாண்மை வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள வேளாண்மை அலுவலர் நாகராஜன் என்பவரை சந்தித்த போது அவர் சான்றிதழ் வழங்க ரூ.1000/- லஞ்சமாக கேட்டது தொடர்பாக, கடந்த 09.08.2007 அன்று அசோக்குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் நாகராஜன், வேளாண்மை அலுவலர், மண்ணச்சநல்லுார் என்பவர் மீது திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண்.13/2007-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அன்றே பொறிவைப்பு நடவடிக்கையின் போது மண்ணச்சநல்லுார் வேளாண்மை வளர்ச்சி அலுவலகத்தில் அசோக்குமாரிடம் நாகராஜன் கையூட்டு பணம் ரூ.1000/-தை கேட்டு அதை சின்னதுரை, உதவி வேளாண்மை அலுவலர் என்பவர் மூலம் பெற்றது தொடர்பாக மேற்படி எதிரிகள் 2 பேரும் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மேற்படி வழக்கானது திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. நீதிமன்ற விசாரணை முடிவுற்று இன்று 29.11.2023 திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் , மேற்படி நாகராஜன், வேளாண்மை அலுவலர், மண்ணச்சநல்லுார் என்பவருக்கு லஞ்ச பணம் கேட்டு பெற்ற குற்றத்திற்காக தலா ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் மற்றும் ரூ.10,000/-அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டணையும் மற்றும் அரசு பதவியை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டணையும் மற்றும் சின்னதுரை, உதவி வேளாண்மை அலுவலர், மண்ணச்சநல்லுார் என்பவருக்கு அரசு பதவியை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டணையும் விதித்ததோடு மேற்கண்ட தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.