27 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

0 20
National

தென்னக ரெயில்வேயில் ரயில்வே வாரிய உத்தரவுகளை முறையாக பின்பற்றாமல் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு (ஓ.பி.சி.) ரயில்வே தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 27 சதவீத இட ஒதுக்கீட்டில் மற்ற பிரிவில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்கி துரோகம் இழைத்து வருவதை கண்டித்தும், பதவி உயர்வில் ரயில்வே வாரியம் வழங்கிய உத்தரவை மற்ற மண்டலங்களில் நடைமுறைப்படுத்தியது போல முறையாக இங்கேயும் அமல்படுத்த கோரியும் திருச்சி ஜங்ஷன் டி.ஆர்.எம். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்ட ரயில்வே ஊழியர்கள் நலச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு
கோட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். கோட்டத் தலைவர் ஜனார்த்தனன், கோட்ட பொறியாளர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மண்டல செயலாளர் பிரசன்ன கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பதவி உயர்வுக்கான தேர்வு வகுப்புகளை இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும். வேலைவாய்ப்பில் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் திரளான இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த ரயில்வே அதிகாரிகள்,ஊழியர்கள் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!