ABVP திருச்சி மாவட்ட கிளை சார்பாக மகளிருக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
மகளிருக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை கண்டித்தும் மகளிரின் பாதுகாப்பை உறுதி செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க கேட்டும் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் தும்பைபட்டி கிராமத்தில் 17 வயது மாணவி.யோகலெட்ஷ்மி நடந்த கொடூர மரணத்திற்கு நீதி கேட்டும் ABVP திருச்சி மாவட்ட கிளை சார்பாக இன்றைய தினம் [08-03-2022] செவ்வாய் கிழமை மாலை 5 மணியளவில் சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ABVP மாநகர செயலாளர் செல்வி.ஹேம சூர்யா, ABVP தென் தமிழக மாநில சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீ. பிரவீன், ABVP பாரதிதாசன் பல்கலைக்கழக செயலாளர் ஸ்ரீ.விக்னேஷ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ABVP மாநகர இணை செயலாளர் ஸ்ரீ. சந்தோஷ் குமார் மற்றும் ABVP மாநகர வாசகர் வட்ட பொறுப்பாளர் ஸ்ரீ. அருண் வெங்கட் ஆகியோர் கண்டனயுரையாற்றினர். மேலும் ABVP மாநில, மாவட்ட, மாநகர பொறுப்பாளர்கள் மற்றும் மாணவத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.