திருச்சியில் ஈவேராவுக்கு சிலை வைக்க எதிர்ப்பு – இந்து மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு!
திருச்சி மாவட்டம் சிறுகனூரில் பெரியாருக்கு தமிழக அரசு சார்பில் 100 கோடி மதிப்பில் 95 அடி சிலையை அமைக்கும் முயற்ச்சியை கைவிடக் கோரியும், எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

அப்போது அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது….”வாழ்நாள் முழுக்க இந்து கடவுள்களை இழிவு படுத்தி பிரச்சாரம் செய்தவர் ஈ.வே.ரா . திமுக ஆட்சி வந்த உடனேயே கி.வீரமணி அவருடன் ஒட்டிக் கொண்டார். அவருடைய பெரியார் மணியம்மை அறக்கட்டளைகள் ஆகியவற்றில் முழுக்க முழுக்க ஊழல் இருப்பதாகவும், அதற்கு வீரமணியும் அவருடைய மகனும் இவர்களுடைய நிர்வாகத்தில் இருப்பதாகவும், அதெல்லாம் அரசுடமையாக்க வேண்டும்.

தமிழகத்தில் பெரும்பான்மையான மக்கள் கடவுளை வணங்குகின்ற மக்கள். இந்த மக்களுடைய மனம் புண்படும் வகையில் ஈவேராவின் சிலை திருச்சியில் அமைவதை இந்து மக்கள் கட்சி எதிர்க்கிறது. மு க ஸ்டாலின் வீட்டிலேயே இறைநம்பிக்கை உடையவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
செப்டம்பர் 17ஆம் தேதி ஈவேராவின் பிறந்தநாளை சமூக நீதி நாள் அறிவித்து உறுதிமொழி எடுக்க வேண்டும் என அறிவித்ததற்கு சமூகநீதிக்கும் ஈ.வே.ராவிற்கும் என்ன சம்பந்தம். செப்டம்பர் 17ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள். வேண்டுமென்றே நரேந்திர மோடியின் பிறந்த நாளை சீர்குலைப்தாகவும், அந்த நாளை இந்து மக்கள் கட்சி எதிர்க்கிறது அதனை வாபஸ் பெற வேண்டும்.” என்றார்