திருச்சி மாவட்டத்தில் பெய்த மழைஅளவு விவரம்

0 424
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;-

செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் புதன்கிழமை காலை 8 மணி வரை எடுக்கப்பட்ட மழைப் பதிவு புள்ளி விவரப்படி திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 841.40 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக லால்குடி வட்டம் நந்தியாறு தலைப்பு பகுதியில் 70.40 மில்லி மீட்டரும், திருச்சி கிழக்கு வட்டம் பொன்மலையில் 54.60 மில்லி மீட்டரும், திருச்சி மேற்கு வட்டத்தில் 54.20 மில்லி மீட்டர் மழையும் மிகக் குறைந்த அளவாக மணப்பாறை வட்டம் பொன்னணி ஆறு அணைக்கட்டு பகுதியில் 8 மில்லி மீட்டரும் பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 35.06 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.