அமைச்சர் கே.என்.நேரு அடித்தாரா? மாமன்ற உறுப்பினர் தன்னிலை விளக்கம்
திருச்சி, ஜன.11 அமைச்சர் கே.என்.நேரு 54ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் புஷ்பராஜை தாக்கியதாக சமூக வலைதளங்களிலும் வீடியோ பரவி வருகிறது. மேலும் பா.ஜ.க சிறுபான்மையினர் பிரிவு சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 54 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் அளித்துள்ள தன்னிலை விளக்கத்தில் கூறியிருப்பதாவது, கடந்த 06 ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 09.30 மணியளவில் எனது மாநாகராட்சி 54 ஆவது வார்டு பெரியமிளகுபாறை பகுதியில் பொதுமக்களின் 50 ஆண்டுகால குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைக்கும் நடவடிக்கையாக நகராட்சி நிர்வாகத்துறையின் அமைச்சரும், திருச்சி மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான கே.என்.நேருவின் சீரிய முயற்சியினாலும், துரித நடவடிக்கையின் மூலம் பொதுமக்களின் குடிநீர்பிரச்சனை தீர்க்கப்பட்டு அதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்குவழங்கும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் குறிப்பாக தாய்மார்கள் அதிக அளவில் கலந்து கொண்டு மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு தங்களதுநெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அத்துனை அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டுசிறப்பித்தார்கள் மிகவும் எளிமையாகவும், எழுச்சியாகவும் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியினை பொறுத்து கொள்ளாத சிலர் சீர்குலைக்கும் வகையில் மாநகர் மாமன்ற உறுப்பினரான என்னை அமைச்சர் கே.என்.நேரு தாக்கி தரக்குறைவாக நடத்தியது போல் ஒரு நிகழ்ச்சியை எடிட் செய்து அதனை சமூக வலைதளங்களிலும், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி அமைச்சரின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க ஒருசில எதிர்கட்சிகள் திட்டமிட்டுநாடகமாடி வருகின்றனர்.
ஒரு சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்த தலித் கிறிஸ்துவரான எனக்கு அமைச்சர் கே.நேரு அவரது தொகுதியான திருச்சிமேற்கு தொகுதியில் மாநகராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்து வெற்றி பெற செய்து எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகப்பெரிய அங்கீகாரமும், கௌரவத்தையும் ஏற்படுத் தந்துள்ளதோடு, எனது வார்டு மக்களின் குடிநீர் பிரச்சனையில் மிகுந்த, அக்கறையெடுத்து குறுகிய காலத்திற்குள் தீர்த்து வைத்தற்கு நான் மிகவும் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் என்று சொல்லி பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் என்னை விடவயதில் மூத்தவர், எனக்கு அண்ணனாக விளங்க கூடியவர்என்பதால் அமைச்சர் காலை தொட்டு வணங்கி நன்றி தெரிவித்தேன். அதற்கு அமைச்சர் எனது காலில் விழாதே என சொல்லி எனது தலையில் உரிமையோடு தட்டி, கடிந்து கொண்டார். இதனை தவறாக சித்தரித்து பொது மக்களின் மத்தியில் சமூக வலைய தளங்களில் பரப்பி வருவதை மாமன்ற உறுப்பினர் என்ற முறையில் வன்மையாக கண்டிக்கின்றேன். இதனைத் தொடர்ந்து அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.