மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தென்னங்கன்றுகள் வழங்கல்

0 253
Stalin trichy visit

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் “85 ” வது பிறந்த நாள், எழுத்தாளரும், சிந்தனையாளர், மக்கள் சக்தி இயக்கம் நிறுவனமான டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் “95” வது பிறந்த நாள் முன்னிட்டு பொன்மலையடிவாரம் பகுதியில்  இன்று (6.04.23) காலை 10.00 மணியளவில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி. நீலமேகம் தலைமையில் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு காஞ்சிபுரம் மாவட்டம் துணை ஆட்சியர் செல்வமதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு நம்மாழ்வார் மற்றும் டாக்டர் எம்.எஸ் உதயமூர்த்தி பற்றி புகழஞ்சலி உரையாற்றி விழாவில் கலந்துக் கொண்டவார்களுக்கு தென்னைங்கன்று வழங்கினார்.

விழாவிற்கு தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதிஸ்குமார், இணை செயலாளர் ஆர்.கே.ராஜா, பசுமை சிகரம் தொண்டு நிறுவனம் பாலாஜி, மக்கள் சக்தி இயக்க சார்பில் சுப்ரமணி, தாமு, சுந்தர், சிவகாமி, பவுசிகா தேவி, சரண் மற்றும் கலந்துக் கொண்டார்கள் . பொதுமக்கள் தென்னங்கன்றை பெற்றுச் சென்றார்கள்.

இன்று முதல் மக்கள் சக்தி இயக்கம், பசுமை சிகரம் தொண்டு நிறுவனம், மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக தென்னங்கன்று வழங்கிறோம்.

தென்னங்கன்று வேண்டும் என்பவர்கள் 9443301713 எண்ணுக்கு தொடர்புக் கொண்டு பெற்று செல்லலாம்

Leave A Reply

Your email address will not be published.