பச்சைமலை கிராமங்களில் 10ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவ, மாணவிகள்
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் அமைந்துள்ளது பச்சைமலை இந்த மலைப்பகுதியில் சுமார் 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர் இவர்களது குழந்தைகள் மலை மேல் உள்ள டாப் செங்காட்டுப்பட்டி இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர் இன்று தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு மலை கிராம மாணவ மாணவிகள் ஆர்வமுடன் இன்று பொது தேர்வு எழுத தயாராகி வருகின்றனர் இங்கு 27 ஆண்களும் 23 பெண்களும் உள்பட 50 மாண மாணவிகள் பொதுத்தேர்வு எழத தகுதி பெற்றுள்ளனர் இங்கு பயிலும் பத்தாம் வகுப்பு
மாணவி இடம் கேட்ட பொழுது முதல் முதலாக பொதுத்தேர்வு எழுதப்போவதால் சற்று பதட்டமாக இருப்பதாகவும் மேலும் தனது உடன் பிறந்த சகோதரி இங்கு படித்து காவல்துறையில் பணிபுரிவதாகவும் தானும் காவல்துறையில் பணிபுரிய ஆசை என தெரிவித்துள்ளார்