திருச்சியில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை!

0 370
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மூவண்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வரும் கொடியேற்று நிகழ்வில் மத்திய மண்டல காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன்,மத்திய மண்டல காவல் துறை துனை தலைவர் ராதிகா,திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மூர்த்தி,திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து 25 ஆண்டுகளாக மாசாற்ற பணியை செய்து வரும் பல்வேறு துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கி சிறப்பித்தார்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

 

Leave A Reply

Your email address will not be published.