வளர்ச்சி திட்டப்பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி வட்டம், மண்ணச்சநல்லூர் சிறுகுடி கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள மல்பெரி வயல்களை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மல்பெரி பட்டுத் தொழிலில் ஈடுபட்டு வரும் விவாசயிகளிடம் சாகுபடி முறைகள் மற்றும் நிகர இலாபம் உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்தார். மேலும், திருவெள்ளறை ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள திறந்தவெளி கிணறு, மரக்கன்றுகள், பூங்கா உள்ளிட்டவைகள் அமையவுள்ள இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர்,சிறுகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு கற்பிக்கப்படும் கல்வி முறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆசிரியர்களிடம் கேட்டறிந்து மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து, திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம், வாழவந்தான் கோட்டை ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டிடத்தில் இயங்கி வரும் ஊர்ப்புற நூலகத்தின் செயல்பாடுகளையும், இலங்கைத் தமிழர் நலன் மறு வாழ்விற்காக ரூபாய் 151 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 30 வீடுகளின் கட்டுமானப்பணிகளையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை தரமானதாகவும், விரைவாகவும் முடித்திட சம்மபந்தப்பட்ட துறை அலவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வுகளின் போது, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) கங்காதாரணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மல்லிகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சங்கரஜோதி, உதவி இயக்குநர்ப ட்டு வளர்ச்சித் துறை திருமதி.எஸ்.ரெங்கப்பாப்பா, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் உள்ளனர்.