செறிவூட்டப்பட்ட உணவை பயன்படுத்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திருச்சி, ஜூலை 28 செறிவூட்டப்பட்ட உணவு பயன்படுத்த ஊக்குவிக்கும் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் – மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்
செரிவூட்டப்பட்ட அரிசியை பொதுமக்கள் உட்கொண்டு நீண்ட ஆயுளை பெறவேண்டும், செறிவூட்டப்பட்ட உணவு பயன்படுத்துவதை ஊக்குவிக்கும்விதமாக, உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர். ஜெகதீஷ் சந்திரபோஸ் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
செறிவூட்டப்பட்ட அரிசி முழுமையான ஊட்டச்சத்து உள்ள உணவாகும். இந்த அரிசியில் இரும்பு சத்து, போலிக் அமிலம், பி12,வைட்டமின் முழுமையாக உள்ளது. இந்த அரிசியானது உடல் வளர்ச்சிக்கு, சரியான உடல் பராமரிப்புக்கும் உதவுகின்றது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்