முதல்வர் காணொளி காட்சியின் வாயிலாக ஜமால் முகமது கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட உள்ள கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஜமால் முகமது கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் கல்லூரி நிறுவனர் நாள் விழா, கல்லூரி வரலாற்றைத் தொகுக்கும் பெருந்திட்ட தொடக்க விழா மற்றும் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழாவில் காணொலி காட்சி வாயிலாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு விழாவில் பேருரையாற்னார்.தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.