தேசிய ஊராக வேலை உறுதித்திட்டப்பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி மாவட்டம் அந்தநல்லூரி ஒன்றியம், புலியூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.1.13 இலட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள முருங்கை கன்றுகள் வளர்க்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பார்வையிட்டு பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். இந்நிகழ்வில் அந்தநல்லூர் ஒன்றியக்குழுத் தலைவர் துரைராஜ், புலியூர் ஊராட்சித் தலைவர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.