மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டி : பதக்கம் வென்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

0 264
Stalin trichy visit

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான மண்டல அளவிலன விளையாட்டுப் போட்டியில் திருச்சி பொன்மலை கேந்திரிய வித்யாலயாவில் பயிலும் வித்யுத் வைஷ்ணவி, நிவேதிகா, வி.பி.சாத்விகா, விவேகாஸ்ரீ ஆகியோர் பேட்மிண்டனில் தங்கப்பதக்கமும், பசிலாசாரா துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கமும், சசிவந்த் டேக்வாண்டோ போட்டியில் வெண்கலப் பதக்கமும், 80 மீ தடை தாண்டும் போட்டியில் ரிபுடாமன் வெள்ளிப் பதக்கமும், ஸ்ரீநிதேஷ் வெண்கலப் பதக்கமும், 8 மாணவ, மாணவிகள் பதக்கங்களை பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பதக்கங்களை வென்ற 8 மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பாராட்டினார். உடன் பள்ளி முதல்வர் நவல் கிஷோர், உடற்கல்வி ஆசிரியர் ஆண்டோ ஐசக், ஆசிரியர் சசிரேகா ஆகியோர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.