அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் கோட்ட தலைவர் பொறுப்பேற்பு!

0 364
Stalin trichy visit

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளுடன் திருச்சி மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோட்ட தலைவர்களை அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள அலுவலக அறைகளில் அமர வைத்து பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு

வாழ்த்தினார்.  அதன்படி திருச்சி மாநகராட்சிக்கு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி வார்டு 32 வது வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ஜெய நிர்மலா இன்றைய தினம் மண்டலம் எண் 2ல் தனது தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் துணை மேயர் திவ்யா, மாமன்ற உறுப்பினர்கள், பகுதி கழக பொறுப்பாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள், மாநகராட்சி அதிகாரிகள், மற்றும் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.