மணப்பாறையில் ஒன்றிய அரசைக் கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி, மார்ச் 29 திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஒன்றிய அரசைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என நூறு நாள் தொழிலாளர்கள் உறுதி மொழி ஏற்பு.
100 நாள் வேலைத்திட்ட நிதி ரூ 4034 வழங்காத ஒன்றிய அரசைக் கண்டித்து திருச்சி மாவட்டம், மணப்பாறை கிழக்கு ஒன்றிய திமுக வின் சார்பில் முத்தபுடையான்பட்டியில் ஒன்றிய அரசைக்கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி தலைமையில் நூற்றுக்கணக்கான நூறுநாள் தொழிலாளர்கள் கலந்து கொண்டு மாசம் ஆயிரம் கொடுக்கிறாரு ஸ்டாலினு எங்க சம்பளத்தைக் கூட புடுங்குறாரு மோடி, உழைக்கும் மக்களே சுரண்டாதே எங்கள் பணத்தை நிறுத்தாதே, ஏழைகள் வயிற்றில் அடிக்காதே, வக்கில்லையா வக்கில்லையா எங்களுக்கு சம்பளத்தை தர மோடிக்கு வக்கில்லையா, மோடியே மோடியே அடிமைகளின் டாடியே உழைக்கும் மக்களை ஏய்க்காதே என பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பினானர்.
மேலும் தமிழ்நாட்டின் நலன்களையும் எதிர்காலத்தையும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுத் தரமாட்டோம் தமிழ்நாட்டில் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம், தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என 100 நாள் திட்ட தொழிலாளர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.