திருவெறும்பூரில் 100 நாள் வேலை திட்டத்தை முடக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

0 159
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 29  கிராமப்புற மக்களின் முக்கிய வாழ்வாதாரமான 100 நாள் வேலை திட்டத்தை முடக்கும் வகையில் ஒன்றிய மோடி பாஜக அரசு தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய நிதியை நிறுத்தி உள்ளதை கண்டித்து தமிழக முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  அதன் தொடர்ச்சியாக திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய நடராஜபுரம் ஊராட்சியில் ஒன்றிய  செயலாளர் கே எஸ் எம் கருணாநிதி தலைமையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டார் .

ஆர்ப்பாட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே. என். சேகரன், மாநில அணி நிர்வாகி கவிஞர் சல்மா மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர் ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு தரவேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் முழக்கமிட்டு வருகின்றனர்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசியதாவது.

நூறு நாள் வேலைக்கு ஒன்றிய அரசு வேலை செய்த உங்களுக்கு வழங்க வேண்டிய 4 முதல் 5 மாதம் இதற்கான நிலுவைத் தொகை ரூ4034 கோடியாகும் இந்த தொகையை வழங்காமல் ஒன்றிய அரசு இழுத்து அடித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகம் முதல்வரும் துணை முதல்வரும் மகளிருக்கு மாதம் ஆயிரம் தொகையை வழங்கி வருகின்றனர்.ரூபாய் 1000 கிடைக்காமல்  உள்ள அனைவருக்கும் விரைவில்  விண்ணப்பம்  வழங்கப்படும் என கூறியுள்ளனர்.

இந்த 100 நாள் வேலை திட்டத்தில் 76 லட்சம் குடும்பத்தில் பயன்பெற்று வருகின்றனர் இதில் 91 லட்சம் பேர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் 86சதவீதத்தினர் பெண்கள் ஆவார்கள் இவர்களில்  21சதவிதத்தினர் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்  அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று கூறியதோடு பொதுமக்களுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

தமிழகத்தில் உரிமையை எதற்காகவும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம் தமிழகத்தின்உரிமையை பாதுகாக்க ஒன்று பட்டுபோராடுவோம் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.