ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க இளைஞரணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம்
திருச்சி, ஏப்.7 திருச்சியில் ஒன்றிய அரசை கண்டித்து திமுக இளைஞரணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம்
திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறு சீரமைப்பில் அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் திருச்சி எதுமனை பிரிவு ரோடு, மண்ணச்சநல்லூர் பகுதியில் திருச்சி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கலையரசன், மருது சேகர் ஆகியோர் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு பேச்சாளர்களாக ராஜகம்பீரன் அப்பாஸ், மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த பொதுக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.