வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
திருச்சி, ஏப்.5 திருச்சி மாவட்டத்தில் நீர்வளத்துறையின் சார்பில் பாசன ஆதாரங்கள் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் 115 பணிகள் ரூ.16.70 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ளது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மேற்கு வட்டத்திற்குட்பட்ட குழுமாயி அம்மன் கோவில் அருகில் குடமுருட்டி வடிகால் வாய்க்காலில் தூர்வாரும் பணியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், நகரப் பொறியாளர் சிவபாதம், நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார், செயற்பொறியாளர் நித்யானந்தம், உதவி செயற்பொறியாளர் தினேஷ்கண்ணன், வேளாண்மை துறை இணை இயக்குநர் வசந்தா, அரசு அலுவலர்கள், மண்டலத் தலைவர் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.