பராமரிப்பு பணிகள் நடைபெறயுள்ளதால் திருச்சியின் சில பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து….

0 308
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட, ஸ்ரீரங்கம் – மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர் சேகரிப்பு கிணறு எண் 1,2,3, தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர் சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் 110 / 11 k.v. துணை மின் நிலையத்தில் மின் வாரியத்தால் பராமரிப்பு பணிகள் 21.06.2022 அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மேற்கொள்ளப்படவுள்ளதால் மின் விநியோகம் இருக்காது.

எனவே, ஸ்ரீரங்கம் பகுதி முழுவதும் மற்றும் ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட சஞ்சீவிநகர், தேவதானம், அரியமங்கலம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளான விறகுபேட்டை, மஹாலக்ஷ்மிநகர் ,நேருஜி நகர், அரியமங்கலம் உக்கடை, அரியமங்கலம் கிராமம், ஜெகநாதபுரம், மலையப்பநகர், ரயில் நகர், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம், பொன்மலை கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளான முன்னாள் இராணுவத்தினர் காலனி, விவேகானந்த நகர், ஜே.கே நகர், மேலகல்கண்டார் கோட்டை, பொன்னேரிபுரம், கல்லுக்குழி, பொன்மலைப்பட்டி, மத்திய சிறைச்சாலை, சுப்ரமணியபுரம், விமான நிலையப்பகுதி, காமராஜ் நகர், செம்பட்டு, காஜாநகர், காஜாமலை, கே.சாத்தனூர், கே.கே.நகர், தென்றல்நகர், ஆனந்த்நகர், சத்யவானி முத்துநகர், அய்யப்பநகர் மற்றும் கோஅபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட உறையூர், மங்களாநகர், பாத்திமாநகர், சிவாநகர், ரெயின்போ நகர், செல்வா நகர், ஆனந்தம்நகர், பாரதிநகர், புத்தூர்பகுதி, எடமலைபட்டிப்புதூர், அன்பு நகர், கிருணணமூர்த்தி நகர், தொண்டைமான் நகர், கிராப்பட்டி போன்ற பகுதிகளில் 21.06.2022 அன்று குடிநீர் விநியோகம் விநியோகம் இருக்காது.

மறுநாள் 22.06.2022 அன்று வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சி மாநகராட்சி ஆணையரால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.