திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

0 192
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 24 திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவிலான தங்கம் கடத்தி வருவது அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் இருந்து அரிய வகை உயிரினங்களையும் கடத்தி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதே போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது . இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சிக்கு வந்தது இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர் அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்த இப்போது அவர் தனது உடமையில் மறைத்து ரூ. 5 கோடி மதிப்பிலான 5 கிலோ ஹைட்ரோபோனிக் போதை பொருளை கடத்தி வந்ததாக தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து அந்த பயணியை தனியா அழைத்துச் சென்று சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.