DYFI சார்பில் திருச்சி அரசு மருத்துவமனையில் இரத்த தான முகாம்
DYFI சார்பில் திருச்சி அரசு மருத்துவமனையில் இரத்த தான முகாம் கொரோனா பெரு தொற்று காலத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள இரத்த தட்டுப்பாட்டை போக்கும் வகையில் திருச்சி மாநகர், ஜங்ஷன் பகுதி குழுவின் சார்பில் 17 யூனிட் இரத்தங்களை தானமாக வழங்கினர்.DYFl ஜங்ஷன் பகுதி குழு செயலாளர் தோழர் K.சேதுபதி தலைமையில் நடைபெற்ற முகாமில் DYFI மாநகர் மாவட்ட தலைவர்தோழர் S.சுரேஷ், துணைத் தலைவர் தோழர் V.சீனிவாசன் முகாமினை துவக்கி வைத்தனர்.திருச்சி அரசு மருத்துவ இரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் மற்றும் ரத்த வங்கியின் ஆற்றுனர் பாலசந்திரன் ரத்ததான கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவ படுத்தினர். .