ஸ்ரீரங்கம் கோவில் அன்னதான திட்டத்திற்கு ஸ்ரீமத் ஆண்டவன் பவுண்ட்ரிகபுரம் சுவாமி ஆஸ்மரம் டிரஸ்ட் சார்பில் பொருட்கள் வழங்கல்

0 736
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : வழிபாட்டு தலங்கள் மூலம் பொதுமக்களுக்கு முககவசம் ,கபசுர குடிநீர் , உணவுப் பொட்டலங்கள் வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் , இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு சேகர்பாபு அவர்களின் அறிவுறுத்தலின்படியும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் சார்பாக தினசரி ஸ்ரீரெங்கா ரெங்கா கோபுர வாயிலில் முக கவசம் சுமார் 100 நபர்களுக்கும் ,கபசுர குடிநீர்ரும் சுமார் 200 நபர் களுக்கும் , வாழையில் இலையில் கட்டப்பட்ட உணவு பொட்டலங்கள் கோயில் வாயிலில் 700 நபர்களுக்கும் , ஸ்ரீரங்கம் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் உடன் இருப்பவர்களுக்கு சுமார் 100 நபர்களுக்கு உணவு பொட்டலங்களும், திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் உடன் இருப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது ,மேலும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலின் உப கோயில்களான உறையூர் அருள்மிகு ஸ்ரீநாச்சியார் கோயில் , திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்சப் பெருமாள் கோயில் , அன்பில் அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோயில்கள் மூலமாக தலா 50 நபர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றது , இந்த அன்னதான திட்டத்துக்கு உதவும் பொருட்டு ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் பவுண்ட்ரிகபுரம் சுவாமி ஆஸ்மரம் டிரெட்ஸ்ட் சார்பாக ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் அன்னதான திட்டத்திற்கு முதற்கட்டமாக சுமார் அரிசி ,துவரம் பருப்பு , உளுந்தம் பருப்பு ,பாசிப்பருப்பு ,கடலை பருப்பு மற்றும் சமையல் எண்ணெய்கள் அடங்கிய தொகுப்பை ஸ்ரீமத் ஸ்ரீனிவாச கோபால மகாதேசிக சுவாமிகள் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து மற்றும் கோயில் அர்சகர் சுந்தர் பட்டரிடம் வழங்கினார் , உடன் கோயில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் , புலவர் கிருஷ்ணா .

 

Leave A Reply

Your email address will not be published.