“திருச்சி மெயில் செய்தி எதிரொலி” டிஎஸ்பி அதிரடி பணியிட மாற்றம்; போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு!

0 3,728
Stalin trichy visit

திருச்சி அருகே உள்ள மணிகண்டம் ஊரணி பட்டியில் போலி மதுபான ஆலை கடந்த 3 மாதங்களுக்கு மேலாக செயல்பட்டு வந்தது குறித்து மது ஒழிப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாத்தாவிற்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கடந்த 14ம் தேதி சம்பவ இடத்திற்கு தனிப்படை போலீசார் உடன் சென்ற சுஜாத்தா அப்பகுதியிலுள்ள வெள்ளைச்சாமி என்பவருக்கு சொந்தமான வீட்டில் போலியாக தயாரித்து 1,700 மதுபாட்டில்கள் மது தயாரிக்க பயன்படுத்தக்கூடிய மூலப்பொருட்கள், பாட்டிலில் ஒட்டும், ஸ்டிக்கர்கள் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது சம்மந்தமாக வெள்ளைச்சாமியின் வீட்டை வாடகைக்கு எடுத்து மதுபானம் தயாரித்த 6 பேரையும் கைது செய்து திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில்

அடைத்தார். இந்த நிலையில் மணிகண்டம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக செயல்பட்டு வந்த போலி மதுபான ஆலையை கண்டு பிடிக்காமல் இருந்ததற்காக திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் மீராபாய் மற்றும் மணிகண்டம் தனிப்பிரிவு ஏட்டு சுரேஷ் ஆகியோரை திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் இரண்டு மாத காலம் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கில் திருவெறும்பூர் டிஎஸ்பி சுரேஷ்குமாருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்பட்டது.  இதுகுறித்து திருச்சி மெயில் இணைய பக்கத்தில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திருவெறும்பூர் டிஎஸ்பி சுரேஷ்குமாரை அரியலூர் குற்றபதிவேடு பாதுகாப்பு கூட டிஎஸ்பியாக பணியிடம் மாற்றம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் எங்கு தங்களின் பெயர் பட்டியலில் வந்து விடுமோ என்ற பயத்தில் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.