திருச்சி மெயில் செய்தி எதிரொலி – திறந்து கிடந்த உறைகிணறுகளில் மரக்கன்றுகள்!

0 399
Stalin trichy visit

கடந்த 23ம் தேதி திருச்சி தில்லைநகர் மேற்கு புறம் முழுவதும் சாலையோரத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட உறை கிணறுகள் திருச்சி மாநகராட்சி சார்பில் அமைக்கபட்டதையும் மேற்படி உறை கிணறுகள் மூடி போட்டு முறையாக பராமரிக்கபடாததால் விபத்து ஏற்படுவதுடன் சாலையோரத்தில் நிறுத்தப்படும் கார் உள்ளிட்ட வாகனங்களால் உடைந்து பாதிக்கப்படுவதாக ஆதாரத்துடன் திருச்சி மெயில் சார்பாக செய்தி வெளியிட்டு இருந்தோம்.

https://trichymail.com/trichy-main-road-will-action-be-taken/

இந்நிலையில் நேற்று 26ம் தேதி மேற்படி சாலையோர சுமார் 40க்கும் மேல்பட்ட உறை கிணறுகளில் மரங்கள் வளர்க்க திட்டமிட்டு கூண்டுடன் செடிகள் நடப்பட்டுள்ளது. நடப்பட்டுள்ள மரங்களை முறையாக பராமரிப்பாளர்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாற்று திட்டத்தை அறிமுகம் செய்து விரைந்து நடவடிக்கை எடுத்த திருச்சி மாநகராட்சிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.

 

 

 

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய….https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

Leave A Reply

Your email address will not be published.