எழில் நகர் ஆண்டு விழா கொண்டாட்டம் : அமைச்சர் அன்பில் மகேஸ் பங்கேற்று பரிசுகள் வழங்கல்

0 402
Stalin trichy visit

திருவெறும்பூர் அருகே உள்ள கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி எழில்நகரில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா எழில்நகர் வளர்ச்சி சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இரண்டு நாட்கள் எழில்நகர் அன்னைதெரசா மைதானத்தில் நடைபெற்றது. எழில்நகர் மகளிர் அமைப்பின் செயலாளர் கீதாசுவாமிநாதன் தலைமை வகித்தார். ராஜலட்சுமி தேவா வரவேற்புரையாற்றினார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி மாணவர்கள் 8 பேர் குழு பங்கேற்ற பறை இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. சங்கத்தின் செயல் தலைவர் ஜி. நீலமேகம், துணைத் தலைவர் எஸ். செல்வராஜ்,
துணைப் பொதுச்செயலாளர் பிடிஎம் சையதுஅலி, பொருளாளர் பி. கோவிந்தராசு, துணை அமைப்பு செயலாளர்கள்
பி. மோகன்ராம், கே. கபிலன், செயலாளர் பி. தனபால், கௌரவத் தலைவர்கள் கே. துரைராஜ், எஸ். தங்கராசு,
ஏ. ரெக்ஸ் மரியபிரிட்டோ, ஜி. தாஜூதீன், எஸ்.ஆறுமுகம், 8-வது வார்டு உறுப்பினர் கணேசபுரம் குமுதா, தவஜோதி
ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் பெ. ராசப்பா தலைமை வகித்தார்.
சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். ராஜ்குமார் வரவேற்றார். வார்டு உறுப்பினர்கள் டி. குமுதா, கே. முனியன்,
எம். தனலட்சுமி, பி. சிவகாமசுந்தரி, எஸ்.ஹர்ஷப் அலிகான், ஆர்.எம். உஷாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி விழாவை வாழ்த்தி பேசுகையில் எழில் நகரில் இருக்கக்கூடிய 34 ஏக்கர் பொது இடம் பாதுகாக்கப்படும். இப்பகுதிக்கு தேவைப்படும் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் கொரோனா தொற்று தொடங்கிய காலம் முதல் மக்கள் ஒருவரை ஒருவர் அதிகமாக சந்திக்க முடியவில்லை அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழ்ச்சி அடைய இது போன்ற விழாக்கள் மிகவும் அவசியமானதாக இருக்கின்றது அப்படிப்பட்ட ஒரு பிரம்மாண்டமான விழாவை வெற்றிகரமாக எழில்நகர் வளர்ச்சி சங்கம் நடத்தி இருக்கிறது சங்கத்திற்கும் சங்க நிர்வாகிகளுக்கும் பாராட்டுகள் என்றார்.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.கே.என்.சேகரன் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் கே. எஸ். எம். கருணாநிதி
கூத்தைப்பார் பேரூராட்சித்தலைவர் செல்வராஜ் 40-வது வார்டு மாநகராட்சி உறுப்பினர் எஸ். சிவக்குமார், கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் ரம்யா சுப்பிரமணியம், துணைத்தலைவர் வேல்விழி, கிருஷ்ணசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் கே. ரமேஷ் மற்றும் சங்கத்தின் கௌரவத்தலைவர்கள் ஜி. செல்வராஜ், பி. புஸ்பராஜா, ஆர். நேரு வளர்ச்சி சங்க செக்டார் செயலாளர்கள் ஜி. ஆறுமுகம், எ. நசீர் அஹமது உள்ளிட்ட மகளிர் அணியினரும் கலந்துகொண்டனர்.
இரண்டு நாள் விழாவிலும் 50 க்கும் மேற்பட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் இளைஞர்களும், சிறுவர் சிறுமிகளும் பங்கேற்றனர். சங்கத்தின் அமைப்புச் செயலாளர் எம். மாணிக்கம் நன்றி கூறினார்.
இரண்டு நாள் நிகழ்ச்சியிலும் எழில் நகர் சிறுவர்-சிறுமியர்களின் நடனநிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு குலுக்கல் சீட்டு மூலம் முதல் பரிசு: ஒரு கிராம் தங்க நாணயமும்
2-ஆம் பரிசு: 40 கிராம் வெள்ளி நாணயமும் 3-ஆம் பரிசு: பித்தளை குத்து விளக்கும் வழங்கி சிறப்பாக கொண்டாப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.