சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை நண்பருடன் கைது: திருவெறும்பூரில் பரபரப்பு

0 1,451
Stalin trichy visit

திருவெறும்பூர் அருகே 5ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை மற்றும் அவரது நண்பர் உட்பட இருவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்திற்கு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவெறும்பூர் அருகே உள்ள எழில் நகரை சேர்ந்தவர் ராஜா (38).இவர் இவர் தனியார் கம்பெனியில் வெல்டர் ஆக வேலை பார்த்து வருகிறான் இவரது மனைவி இந்திராணிஇவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் இவர்களது 11வயது மகள் அருகில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.

அந்த சிறுமியிடம் அவரது தந்தை ராஜா மற்றும் அவரது நண்பரான பெல் நகர் கலைஞர் கருணாநிதி நகரைச் சேர்ந்த கணேசன் (35) வெல்டராக வேலை பார்த்து வரும் அவரது நண்பர் ஆகிய இருவரும் சிறுமியிடம் பல முறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தனது தாய் இந்திராணியிடம் சிறுமி கூறி கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது இந்தநிலையில் மலைக்கோயிலில் உள்ள தனது சித்தி கெஜலட்சுமி இது குறித்து கூறியுள்ளார் இதனால் அதிர்ச்சி அடைந்த கஜலட்சுமி உடனடியாக இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் திருச்சி மாவட்ட குழந்தைகள் நல காப்பக நிர்வாகி பிரபு மூலம் புகார் பெற்று ராஜா மற்றும் கணேசனை கைது செய்துபோஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.