ஆன்லைன் புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிப்பது குறித்து பயிற்சி
திருச்சி மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆன்லைன் புகைப்பட வாக்காளர் பட்டியல்கள் தயார் செய்வது குறித்த பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடந்தது. இதில் மாநகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமான் கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார்.
இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் உதவி ஆணையர் சண்முகம், முதன்மை பயிற்றுனர், மாகராட்சி அனைத்து கோட்ட வருவாய் அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், தேர்தல் இருக்கை எழுத்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் அனைத்து புள்ளி விவர தொகுப்பாளர்களுக்கு ஆன்லைன் புகைப்பட வாக்காளர் பட்டியல்கள் தயார் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.