கார் மோதி முதியவர் பலி

0 274
Stalin trichy visit

திருச்சி கே.கே.நகர் ராணிமங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் அலோசியஸ் (வயது 71). இவர் சொந்தமாக தொழிலாளி செய்து வந்தார். இவர் பெங்களூரில் உள்ள தனது மகன் வீட்டில் நடந்த குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திருச்சிக்கு வந்த இவர் மத்திய பஸ்நிலையத்தில் இருந்து தனது வீட்டுக்கு நடந்து சென்றார்.

அப்போது மன்னார்புரம் பைபாஸ் சாலையில் நடந்து வந்த போது பின்னல் வந்த கார் அவர் மீது மோதியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.