கஞ்சா விற்ற மூதாட்டி கைது
திருச்சி மார்ச்.25 திருச்சி மாநகர மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதரசி ஸ்டெல்லா மேரி தலைமையிலான போலீசார் திருச்சி கோரையாறு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்றதாக திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டியன் மனைவி தனலட்சுமி (வயது 67) என்கிற மூதாட்டியை கஞ்சா விற்றதாக மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.